இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் சேத பாதிப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுகிறார். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தும் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
முன்னாள் பிரதமர் நேருவின் 2 தவறுகளால் தான் ஜம்முகாஷ்மீருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.
தலைநகர் சென்னையில் இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்பி வரும் நிலையில் தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காக்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் ராஜபுத்ர இளைஞர் அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அம்மாநிலத்தில் பதற்றம் எழுந்துள்ளது.
இன்று முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் உரிய அட்டவணைப்படி வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
565வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
காரைக்குடியில், 15 வயது சிறுமியை துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து மது குடிக்க வைத்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய பெண் எழுத்தாளர் மீரா சந்த்க்கு சிங்கப்பூரின் உயரிய கலை விருதை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் வழங்கி கவுரவித்தார்.
மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி 20 கிரிக்கெட் போட்டி இந்திய மகளிர் அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று போனது.