பெட்ரோல் 100 ரூபாயா….? பைக்கில் வந்த மனுஷன் பண்ணிய வேலை… என்னா கோபம்…!
ஐதராபாத்: தெலுங்கானாவில் பெட்ரோல் விலையை கண்டித்து இரு சக்கர வாகனத்தை ஒருவர் ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கிறது. மும்பை போன்ற பல நகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்துள்ளது.
இந் நிலையில் பெட்ரோல் விலையை கண்டித்து, தெலுங்கானாவில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் இளைஞரணியை சேர்ந்தவர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் விலையை கண்டித்து உசைன் சாகர் ஏரியில் அவர் தமது பைக்கை வீசி அதிர வைத்து இருக்கிறார்.
பைக் ஏரியில் வீசப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. பைக்கை வீசிய நபருடன் இருக்கும் நபர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு உள்ளனர்.