Sunday, May 04 12:06 pm

Breaking News

Trending News :

no image

The Legend சரவணன் வயசு இவ்வளவா..? இணையத்தை கலக்கும் புதிய தகவல்


சென்னை: The Legend சரவணன் அருள் வயது பற்றிய தகவல் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

வியாபார உலகின் முடிசூடா நிறுவனமான லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவு பெயர் பெற்ற இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அருள். இவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் தி லெஜண்ட். பாலிவுட் நடிகை ரவுட்டேலா தான் கதாநாயகி.

படத்தின் இயக்குநர் இரட்டையர்கள் ஜேடி ஜெர்ரி. இசை ஹாரிஸ் ஜெயராஜ். படம் வெளியாகி உள்ள நிலையில் விமர்சனங்கள் தாறுமாறாக வந்து கொண்டே இருக்கிறது. ஒண்ணுமில்ல, பார்க்கலாம், சூப்பர் என தினசரி ராசிபலன் மாறுவது போல் நாள்தோறும் கலவையான விமர்சனங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

படம் குறித்து அவர் அண்மையில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலோ வைரலானது தனிக்கதை. இப்போது சரவணன் அருள் வயது என்ன என்று ஒரு பேச்சு திரையுலகத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

அவரின் வயது 51 என்று தற்போது விவரம் வெளியாகி உள்ளது. ஆனால் திரையில் இவ்வளவோ வயதா என்று சொல்ல முடியாத அளவுக்கு மாற்றங்களுடன் நடித்து அசத்தி உள்ளார் என சொல்லலாம்.

51 வயசான நபர் மாதிரி தெரியல என்று இணையத்தில் இவருக்கு ஆதரவான கருத்துகளும் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமாவில் மட்டும் கதாநாயகர்களின் வயதை எப்போதுமே ரசிகர்கள் கண்டு கொள்வது இல்லை.

Most Popular