அயலானுக்கு வந்த சிக்கல்…! படம் அவ்வளவுதானா..?
சென்னை: அயலான் படத்துக்கு வந்த திடீர் சிக்கல் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக அறியப்படுவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் தற்போது நேற்று இன்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் டைரக்ஷனில் அயலான் படத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இந்த புரொட்க்ஷனில் இருந்து வருகிறது.
வரும் பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. தற்போது திடீர் திருப்பமாக, சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது அயலான் படத்தை 4 வாரங்கள் வரை வெளியிட தடை விதித்துள்ளது.
இதற்கு காரணமும் உள்ளது… ஒப்பந்தம் செய்துகொண்டதை மீறி அயலான் மற்றும் ஆலம்பனா ஆகிய படங்களை வெளியிடுவதாக டிஆர்எஸ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. 10 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு 3 கோடி மட்டுமே திருப்பி தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் அயலான், ஆலம்பனா ஆகிய 2 படங்களையும் 4 வாரங்களுக்கு வெளியிட தடை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இதை அறிந்த பட ஊழியர்களும், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சியிலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். படத்துக்கு ஏற்பட்ட பிரச்னை விரைவில் சரியாகி ரிலீசாக வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்து உள்ளனர்.