நல்லா கேட்டுக்குங்க..! கொரோனா பற்றி அரசாங்கம் சொன்ன ஹேப்பி நியூஸ்
டெல்லி: இந்தியாவில் கொரோனா குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
உலகில் 200க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. 2 கோடிக்கும் அதிகமானவர்களை கொரோனா தாக்கி உள்ளது. 9 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்.
இந்நிலையில், இந்தியாவில் 4 நாட்களாக, கொரோனா நோயாளிகளின் குறைவாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தினசரி எண்ணிக்கையைக் காட்டிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத் துறை கூறி உள்ளது.