‘நிலை’ தடுமாறிய சீமான்…! இணையத்தில் ஷாக் வீடியோ
சென்னை: கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரை சென்னையில் உள்ள மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான் பேசுவார், இல்ல கர்ஜிப்பார், இல்ல… இல்ல கத்துவார்… அட போப்பா அவரு ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பார் என அவரின் மேடை பேச்சுகள், செய்தியாளர்கள் சந்திப்புகள், தனி பேட்டி ஆகியவற்றை பார்ப்பவர்கள் சொல்வது உண்டு.
அவர் என்ன பேசினால் என்ன…? உடம்பு சிலிக்குது, அதை பாருங்க என்று நாம் தமிழர் தம்பிகள் சீமானின் வீடியோவை சிலாகித்து மகிழ்வது உண்டு. அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பேசி இருக்கிறார்.
அவரின் பேசிய பேச்சில் உள்ள சில காணொளிகளை இணையத்தில் வெளியிட்டு உள்ள பலரும் அதுபற்றி பதிவிட்டுள்ள கருத்துகள் சற்றே அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. பம்மலில் இந்த நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சியி அவர் பேசியவற்றில் சில பகுதிகளை இப்போது பார்ப்போம்: கூட்டு பொரியல்ன்னு பேசிக்கிட்டு? எப்பவுமே கூட்டணி கிடையாது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 20 பெண்கள், 20 ஆண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்.
தலைநகர் சென்னையில் 3 பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம், சென்னையில் என் பாத்திமா நிப்பா, வடசென்னையில் தங்கச்சி இளவஞ்சி நிப்பா, தென் சென்னையில் தங்கச்சி நாச்சியாள் சுகந்தி நிப்பா என்று பேசி இருக்கிறார்.
அவரின் பேச்சு அடங்கிய காணொளியை கண்ட பலரும் சீமான் நிலையாக இல்லை? நிலை தடுமாறி பேசியிருக்கிறார் என்று கருத்து கூறி உள்ளனர். இன்னும் சிலரோ கட்சியில் உறுப்பினராக இல்லாதவர் நாச்சியாள் சுகந்தி.
அவர் தான் கட்சியின் எம்பி வேட்பாளரா? இது என்ன கூத்து? தன்னிலை மறந்து சீமான் பேசியிருக்கிறார்? ஏன்? என்று ஆராய்ச்சியில் இறங்கி உள்ளனர். 10 நாள் முன்பாக நாம் தமிழர் கட்சியில் இல்லை என்று நாச்சியாள் சுகந்தி அளித்த பேட்டி ஒன்றையும் ரவுண்டு கட்டி அடித்து வருகின்றனர்.
எது எப்படியோ? சீமானின் காணொளியை மீண்டும் மீண்டும் போட்டு பார்த்து சோகம் கொள்கின்றனர் நாம் தமிழர் தம்பிகள். அவரின் பேச்சு அடங்கிய காணொளியை இங்கே கீழே காணலாம்: