உள்ளது உள்ளபடி…! கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் ‘தெறி’ வார்த்தை…!
சென்னை: உள்ளது உள்ளபடி பிரச்சனைகளை முன்வைத்து பேசுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் அவர் முகவரை ஆற்றியதாவது:
புதியதாக பொறுப்பேற்ற உடன் கொரோனா பரவல் என்ற பெரும் சவாலை ஏற்று மக்களை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. மக்களை காக்கும் மகத்தான பணியில் அனைரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டும்.
தமிழகத்தில் தற்போது தினசரி தொற்றால் பாதிக்கப்படுவர் என்ணிக்கை 25 ஆயிரம் என்று இருக்கிறது. வரும் 2 வாரங்களில் குறையும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தரப்பில் கண்டறறிப்பட்டுள்ளது.
தொற்று அதிகரிக்கும் போது அதற்கேற்ப படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜின் தேவை. எனவே அதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ள வேண்டும். எனவே மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பர்களும், அனைத்து அலுவலர்கள் முழு முனைப்போடு இணைந்து செயலாற்ற வேண்டும்.
இறப்புகளை குறைக்க மருத்துவர்கள், செவிலியர்கள் அரும்பாடுபட்டு பணி ஆற்றி வருகின்றனர். கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், ரெம்சிடெசிவிர் மருந்து வகைகளை கிடைக்க செய்யுமாறும் கேட்டுக கொள்கிறேன்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பதும் அதிகமாகி உள்ளது. தகுதியான அனைவரும் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று கூடுதலாக உள்ளது.
எனவே இந்த பகுதிகளில் உள்ள அலுவலர்கள் நோய் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். இந்த கூட்டத்தின் நோக்கம் எல்லா அலுவலர்கள் உள்ளபதை உள்ளபடியே முன்வைத்து, அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை, கடக்க வேண்டிய தூரத்தை ஒளிவு மறைவு இல்லாமல் எடுத்து உரைக்க கொள்ள வேண்டும்.
முழு உண்மையை நேருக்கு நேர் சந்தித்து, மக்கள் மகிழ்ச்சி அடையும் நிலையை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.