யார் கீழ்சாதி…? நாடாரா… ஹரிஜன்னா..? யூனிவர்சிட்டி கேள்வித்தாளால் சர்ச்சை
சேலம்: யார் கீழ்சாதி என்று பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் எழுப்பப்பட்ட கேள்வி பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகம் சேலத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் முதுகலை வரலாற்றுத்துறை 2ம் ஆண்டுக்கான செமஸ்ட்ர் தேர்வு நேற்று நடைபெற்று இருக்கிறது.
அந்த தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் எழுப்பப்பட்டு உள்ள ஒரு கேள்வி தற்போது பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. அதில் தமிழகத்தில் யார் கீழ்சாதி என்று கேட்கப்பட்டு அதற்கு 4 ஆப்ஷன்களும் தரப்பட்டு இருந்தது.
மகர்,ஈழவா, நாடார், அரிஜன் என்பது அந்த 4 ஆப்ஷன்கள். 11வது கேள்வியாக எழுப்பப்பட்டு இந்த கேள்வி பற்றிய விவரம் அறிந்து சாதி ஒழிப்பாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சாதி ஒழிப்பை முன்னிறுத்தி செயல்பட்ட பெரியார் பெயரில் இயங்கும் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வியா என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.