தடுப்பூசி போட்டதால் வயசு பசங்களுக்கு வந்த ‘புது’ சிக்கல்..! ஒரு ‘பகீர்’ ஆய்வு
இஸ்ரேல் நாட்டில் பைசர்(Pfizer) தடுப்பூசி போட்டுக் கொண்ட இளம் வயதினருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பல நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் இஸ்ரேலில் பைசர் (Pfizer) தடுப்பூசி போட்டுக் கொண்ட இளம் வயது உடையவர்களுக்கு குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இளைஞர்களுக்கு இதய தசைகளில் ஒரு வித அழற்சி ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளதா க அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் முதல் 2021ம் ஆண்டு மே மாதம் வரை கிட்டத்தட்ட 5 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அவர்களில் 275 பேருக்கு இதய தசைகளில் அழற்சி ஏற்பட்டுள்ளது மருத்துவ ஆய்வில் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக ஆய்வு ஒன்றையும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் நடத்தி இருக்கிறது.
அதன் முடிவுகளின் படி இதய அழற்சியால் பாதிக்கப்பட்டவர்கள் 4 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2வது டோஸ் தடுப்பூசி பெறுவதற்கும், 16 முதல் 30 வயது கொண்ட இளைஞர்களுக்கும் இந்த அழற்சி தோன்றுவதற்கும் தொடர்பு உள்ளது என்றும் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் நாட்டு சுகாதாரத்துறை ஆய்வு முடிவுகளை பைசர் நிறுவனம் ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.