Sunday, May 04 12:57 pm

Breaking News

Trending News :

no image

ரோகித் 7, மத்தவங்க 9….! 100 கோடி நெஞ்சங்களை பஞ்சராக்கிய சம்பவம்..!


அகமதாபாத்; இந்திய அணி உலக கோப்பையில் மண்ணை கவ்வியதற்கான காரணங்கள் வெளியாகி ரசிகர்களை கதற வைத்துள்ளன.

ஒன்றல்ல, இரண்டல்ல… உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து போட்டிகளில் அசுரனாக கலக்கிய இந்திய அணி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் மண்ணை கவ்வியது. முதலில் பேட்டிங்களில் களம் இறங்கிய இந்திய அணி 240 ரன்களை மட்டுமே சேர்த்தது.

350 அல்லது அதற்கு மேலான ரன்களே வெற்றியை கொண்டு வந்து தரும் என்று வீரர்கள் மட்டுமல்ல,ரசிகர்கள் நினைத்திருந்தும் 240 ரன்களை மட்டுமே இந்திய எடுத்திருந்தது. கடந்த போட்டிகளில் பேட்டிங்கில் கலக்கிய இந்திய வீரர்கள் இந்த பைனலில் சொதப்பி தள்ளி விட்டனர்.

இமாலய ஸ்கோர் இல்லாவிட்டாலும், கடும் நெருக்கடியை கொடுக்கும் வெற்றி இலக்கு கூட இல்லையே என்று ரசிகர்கள் கன்னத்தில் கை வைத்திருக்க, தொடக்கத்தில் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று ஆஸ்திரேலியா தடுமாறினர். ஆஹா…இனி வெற்றி நமக்குதான் என்று இந்திய ரசிகர்கள் துடிப்புடன் இருக்க, ஆஸியோ, அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

எப்படியும், கோப்பை நமக்கு தான் என்ற இந்திய அணி வீரர்களும், ரசிகர்களும் துவண்டு, அரண்டு போயிருக்க, தோல்விக்கான காரணங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

பைனலில் ரன்கள் முக்கியம், குறிப்பாக பவுண்டரிகள் ரன் விகிதத்தை ஜெட் வேகத்தில் மேலே கொண்டு போய் பவுலர்களை அலற வைத்துவிடும். ஆனால் நேற்றைய பேட்டிங்கில் ஒட்டுமொத்தமாய் இந்திய அணி சொதப்பி தள்ளி இருக்கிறது.

கேப்டன் ரோகித் சர்மா மொத்தம் அடித்த பவுண்டரிகள் 7. மற்ற 9 வீரர்கள் அடித்த மொத்த பவுண்டரிகள் வெறும் 9 மட்டுமே. பவர் ப்ளேயில் அடித்து துவைக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் பைனலில் பவர் ப்ளேயில் வெறும் 4 பவுண்டரிகள் தான் அடித்தனர்.

கடந்த போட்டிகளில் மிடில் ஆர்டரில் இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. ஆனால் பைனலில் ஒரு விக்கெட் கூட விழவில்லை. கேப்டன் ரோகித் தவிர, மற்ற வீரர்கள் பொறுப்புடனும், இது பைனல் போட்டி என்பதை உணரவில்லையோ என்ற எண்ணம் தான் மேலோங்கி காணப்பட்டது.

லீக்கில் அசத்திவிட்டு,கட்டாய வெற்றி, கோப்பையே குறிக்கோள் என்பதை இந்திய அணி வீரர்கள் கோட்டை விட்டுவிட்டனர் என்பதே ரசிகர்களின் ஒட்டுமொத்த புலம்பலாக உள்ளது.

Most Popular