அரசு ஊழியரா..? இதோ உங்களுக்கு அடிக்கும் டபுள் ஜாக்பாட்..?
டெல்லி: அரசு ஊழியர்களுக்கு விரைவில் வீட்டு வாடகைப்படி உயர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 சதவீதமாக அண்மையில் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை கேட்ட மத்திய அரசு ஊழியர்கள் ஏகபோகமாக மகிழ்ச்சி அடைந்தனர்.
இப்போது அவர்களுக்கு ஜாக்பாட்டாக ஒரு செய்தி கசியவிடப்பட்டு உள்ளது. அதாவது அகவிலைப்படி உயர்த்தியது போன்று, வீட்டு வாடகைப்படியும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அகவிலைப்படி 17 சதவீதம் முதல் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப வீட்டு வாடகைப்படி 27 சதவீதம் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. 2017ம் ஆண்டு ஜூலையில் அகவிலைப்படி 25 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தால் வீட்டு வாடகைப்படியும் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தற்போது வீட்டு வாடகைப்படி உயரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை அறிந்த மத்திய அரசு ஊழியர்கள் சூப்பர் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.