அசிங்கமா இருக்கு..! இப்படி பண்ணலாமா கமல்…?
சென்னை; பாரதியார் பிறந்த நாளுக்கு நடிகர் கமல்ஹாசன் போட்டுள்ள டுவிட்டரில் நிகழ்ந்த ஒரு விஷயம், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.
முண்டாசு கவிஞன் பாரதியை யாருக்கு தான் பிடிக்காது..! அதிலும் சினிமா உலகில் பலருக்கு பிடித்த ஆதர்ஷ கவிஞன் யார் என்று அது பாரதியார் தான். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் தனது பல படங்களில் பாரதியார் வரிகளை பயன்படுத்தி பேசியிருப்பார்.
அப்பேர்ப்பட்ட பாரதிக்கு இன்று பிறந்த நாள். முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமலும் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பார்த்த ரசிகர்கள், அதை விமர்சித்து வருகின்றனர். கமலை அர்ச்ச்னையும் செய்து தாளித்து வருகின்றனர்.
https://twitter.com/ikamalhaasan/status/1734073300966682884
கமல் தமது பதிவில் கூறி உள்ளதாவது:
சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன கவிதையின் பிறந்த நாளாகக் கொண்டாடுவோம் என்று கூறி உள்ளார்.
படிக்கும் போது நமது மயிர்க்கால்கள் கூச்செறிவது போன்று இருந்தாலும் இதை பார்த்தவர்கள் வேறொரு விஷயத்தை நுட்பமாக உணர்ந்து சுட்டிக்காட்டி உள்ளனர்.. இன்னும் சொல்ல போனால் விமர்சித்து இருக்கின்றனர்.
அதாவது, தமது எக்ஸ் பக்கத்தின் DPயில் பாரதியின் படத்தை தமது போட்டோவுடன் பிணைத்து, வெளியிட்டு இருக்கிறார் கமல்.
அந்த DPஐ எடுத்துவிடுங்கள்…. ரொம்ப அசிங்கமா இருக்கு.. உங்களுக்கு புண்ணியமா போகட்டும் என்று விமர்சித்துள்ளனர். வேறு சில ட்விட்டராட்டிகள், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இடம்பெற்று நடத்தி வரும் எடக்கு மடக்கான நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஆடைகளை பற்றி போட்டோ போட்டு கலாய்த்து தள்ளி வருகின்றனர்.