Sunday, May 04 12:51 pm

Breaking News

Trending News :

no image

கொரோனாவுக்கு வாழ உரிமை இருக்கிறதாம்…! முன்னாள் முதல்வர் ‘கிச்சுகிச்சு’…!


கொரோனாவுக்கு வாழ உரிமை இருக்கிறதாம்…! முன்னாள் முதல்வர் ‘கிச்சுகிச்சு’…!

டேராடூன்: இந்த நாட்டில் கொரோனா வைரஸ் வாழ்வதற்கு உரிமை இருப்பதாக ஒரு முன்னாள் முதல்வர் பேசியிருப்பது சர்ச்சையை உண்டு பண்ணியிருக்கிறது.

நாட்டில் ஏதேனும் பூதாகரமான விஷயம் நடக்கும் போது சிலர் படு காமெடியாக பேசி அதன் முக்கியத்துவத்தை நீர்த்து போக செய்துவிடுவர். அதற்கு பல உதாரணங்களை கூறலாம். அதிலும் சில விஷயங்கள் அறிவியலுக்கு சவால் விடும் வகையில் இருக்கும்… அதற்கு உதாரணமாக மாட்டு சாணக்குளியலை சொல்லலாம்.

இப்போது அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வாழ உரிமை இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் பேசி கிச்சுகிச்சு மூட்டி உள்ளார். அவர் வேறு யாருமல்ல.. உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் இந்த கருத்தை முன் வைத்து பேசி இருக்கிறார்.

அவர் மேலும் கூறியது இதுதான்: கொரோனா வைரஸ் என்பது ஒரு உயிரினம். மனிதர்களை போல அந்த வைரசுக்கும் இந்த நாட்டில் வாழ உரிமை இருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய நாம் அனைவரும் அரும்பெரும் புத்திசாலிகள் போன்று அவற்றை அழிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

அதனால் அந்த வைரஸ் தமது உருவத்தை மாற்றிக் கொண்டு வருகிறது என்று கூறி உள்ளார். ஒரு முன்னாள் முதல்வரே இப்படி பொருத்தமற்ற கருத்தை கூறி இருப்பது கடும் சர்ச்சைகளையும், விமர்சனத்தையும் எழுப்பி உள்ளது.

Most Popular