தொண்டர்களுக்கு கேப்டன் விஜயகாந்த் கொடுத்த நல்ல சேதி….!
சென்னை: உடல்நிலை சீரானதையடுத்து, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவரான விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலையில் பாதிப்பு இருந்து வருகிறது. ஆகவே ஆக்டிவ் பாலிடிக்சில் இருந்து விலகியே இருந்து வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் அவ்வளவாக ஈடுபட முடியவில்லை.
இந் நிலையில் நேற்று விஜயகாந்துக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் நெகட்டிவ் என்று முடிவு வந்தது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த விஜயகாந்த் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். இந்த தகவலை அறிந்த தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.