பணத்தை பத்திரமாக வைத்து கொள்ளுங்க…! வாடிக்கையாளர்களை அலர்ட் செய்த பிரபல வங்கி…!
டெல்லி: வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் மோசடி கும்பல்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால் ஆன்லைன் பண வரித்தனைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதே நேரத்தில் ஏமாற்று பேர்வழிகளின் கைவரிசையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.
மோசடி கும்பல்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முன்னிணி வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்து உள்ளது. நாடு முழுவதும் ஏராளமான கிளைகளை கொண்டு இந்த வங்கிக்கு மட்டும் கிட்டத்தட்ட 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந் நிலையில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு பற்றிய எந்த தகவல்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனறு அறிவுறுத்தி உள்ளது. எஸ்பிஐ, ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு பற்றிய விவரங்களை யாரும் கேட்பதில்லை, எனவே உஷாராக இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களை அலர்ட் செய்துள்ளது.