Sunday, May 04 12:56 pm

Breaking News

Trending News :

no image

பிரசவத்துக்கு கையில் காசில்லாமல் தவித்த பிரபல நடிகை…!


பிரசவத்துக்காக கையில் காசில்லாமல் தாம் கஷ்டப்பட்டதை தமது சுய சரிதையில் குறிப்பிட்டு உள்ளார் பிரபல நடிகை நீனா குப்தா.

சினிமாவில் பெயரையும், புகழையும் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. திரையுலகில் இன்று முன்னேறிய பலரும் தொடக்கத்தில் பெரும் சிரமங்களை கடந்து தான் வந்திருக்கின்றனர்.

காலங்கள் கடந்த பின்னர் திரையுலக பிரபலங்கள் பலரும் சுய சரிதை எழுதி அதை வெளியிடுவார்கள். அப்படி ஒரு பிரபலமான நடிகை எழுதி உள்ள சுய சரிதை பற்றி தான் பாலிவுட் முழுவதும் பேச்சாக இருக்கிறது. அவரது பெயர் நீனா குப்தா. பாலிவுட் பிரபல நடிகையான இவர் சச் ககுன் தோ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

அவரின் இந்த புத்தகம் வரும் ஜூன் 14ம் தேதி வெளியாக உள்ளது. அந்த புத்தககத்தின் அட்டை படம் உள்ளிட்டவற்றை அவர் தமது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். பிரசவ காலத்தில் காசில்லாமல் எப்படி கஷ்டப்பட்டேன் என்பதை அவர் தமது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: வங்கி கணக்கில் நான் வெறும் 2 ஆயிரம் ரூபாய் தான் வைத்திருந்தேன். சுக பிரசவம் இருந்தால் 2 ஆயிரம் ரூபாய் ஆகும். அதுவே சிசேரியன் என்றால் 10 ஆயிரம் ஆகும். அப்போது தான் டாக்ஸ் ரி இம்பர்ஸ்மென்ட் மூலம் எனக்கு 9 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.

எனக்கு சிசேரியன் என்று டாக்டர் சொல்லிவிட்டதால் இந்த பணம் போதுமானதாக இருந்தது என்று தமது நீனா குப்தா கூறி உள்ளார்.

Most Popular