கெட்ட வார்த்தை பேசினேனா..? தரமான சம்பவம் செய்த உதயநிதி
தாம் பேசிய அப்பன் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி தந்துள்ளார்.
வெள்ளம், நிவாரணம் என்ற இரு பிரச்னைகளில் தமிழக அரசு சிக்கி தவிக்க, உரிய நிதி தராமல் இழுத்தடிக்கிறது மத்திய அரசு. அதிக வரி செலுத்தும் தமிழகத்துக்கு குறைவான நிதி, மத்திய அரசின் பாராமுகம் என்று தமிழக மக்கள் பாஜக மீதும், ஆளும் மத்திய அரசு மீதும் கடுப்பில் இருக்கின்றனர்.
மேலும், நிதி கேட்டு கோரிக்கை விடுத்த போது உங்க அப்பன் வீட்டு சொத்தையா கேக்குகிறோம் என்று அமைச்சர் உதயநிதி பொளந்துகட்ட, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமது உடல்மொழியாலும் வார்த்தை பகிர்வாலும் பதிலடி கொடுத்துள்ளார்.
அதற்கு ஒரு விளக்கம் தந்த உதயநிதி ஸ்டாலின், அடுத்த கட்டமாக இறங்கி அடிக்க ஆரம்பித்து இருக்கிறார். தாம் பேசிய அப்பன் என்ற வார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை, நான் கேட்டது பேரிடர் நிதி தான். நான் பேசிய அப்பன் என்ற வார்த்தை கெட்டவார்த்தையா? தவறான வார்த்தைகள் பேசவில்லை.
பாஜகவின் இந்த 9 ஆண்டுகால ஆட்சியே பேரிடர்தான், அதனால் தான் மழையால் ஏற்பட்ட பாதிப்பை தனியாக பேரிடர் என்று அறிவிக்க விருப்பமில்லாமல் உள்ளனர்.
இதில் உன்னுடைய தவறு, என்னுடைய தவறு என்று குற்றம் சுமத்தி, எதையும் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று கூறி உள்ளார். உதயநிதியின் விளக்கத்தை பார்க்கும் போது, அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான மோதல் போக்கு மேலும் நீடிக்கும் என்றுதான் தோன்றுகிறது… ஆனால் உ.பிக்களோ இதை தரமான சம்பவம் என்று சிலாகிப்பது தனிக்கதை…!