கத்துக்குட்டி.. கத்துக்கோ…! உதயநிதியை உறியடித்த பாஜக அமைச்சர்
அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி, அவர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் அட்வைஸ் செய்திருக்கிறார்.
தமிழகம் மழை, வெள்ள அரசியல் இன்னும் ஆறவில்லை… நாளுக்கு நாள் மத்திய மாநில அரசுகள் இடையே மோதலையும், கட்சி ரீதியாக பெரும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது.
கொடுத்த வரிப்பணத்தில் நிவாரண நிதி தாங்க… உங்கப்பன் வீட்டு காசையா கேக்குறோம் என்று அமைச்சர் உதயநிதி கேட்டாலும் கேட்டார், அது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறி போயுள்ளது. செய்யாமல் இருப்பதை விட, செய்யவே மாட்டோம் என்று மத்திய பாஜக அரசின் நோக்கம் என தமிழக மக்கள் முறுக்கிட ஆரம்பித்துவிட்டனர்.
இந் நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:
எந்த நடவடிக்கையாக இருந்தாலும், சேவை மனப்பான்மை, முன் எச்சரிக்கையாக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து இருக்கின்றனர்.
உதயநிதி ஒன்றும் கருணாநிதி அல்ல. அவர் ஒரு கத்துக்குட்டி. இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அமைச்சர் என்பதற்கான தரத்தை அவர் குறைத்துவிட்டார் என்று கூறி உள்ளார்.