மதுசூதனன்…. ரூ.26 லட்சம்…! ஓபிஎஸ், ஈபிஎஸ் சொன்ன விஷயம்
சென்னை: மதுசூதனின் மருத்துவ செலவை அதிமுக ஏற்றுக் கொண்டு பணம் செலுத்தி உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவித்து உள்ளனர்.
எம்ஜிஆர் விசுவாசி, அதிமுகவின் மிக மூத்த உறுப்பினர்… கட்சியினரால் அண்ணன் என்று அன்போடு அழைக்கப்படுவர் மதுசூதனன். அதிமுக அவை தலைவர் பதவி வகித்து வந்த அவர் உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டார். கடந்த 5ம் தேதி மருத்துவமனையில் காலமானார்.
அவரது மருத்துவ செலவு என்ன என்பது பற்றியும், யார் அதை ஏற்றுக் கொள்வது பற்றியும் கடந்த சில நாட்களாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுகள் ஓடின. ஒரு கட்டத்தில் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது என்றும் கூறலாம்.
இந் நிலையில், மதுசூதனின் மருத்துவ செலவை அதிமுக ஏற்றுக் கொண்டு பணம் செலுத்தி உள்ளது. இது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
அதில் கூறியிருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், கழகத்தின் மூத்த முன்னோடியுமான மரியாதைக்குரிய திரு. மதுசூதனன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 5-8-2021 மரணமடைந்துவிட்டார்.
இந்நிலையில் இ. மதுசூதனன் அவர்களுடைய மருத்துவ சிகிச்சைக்கான மொத்த செலவு தொகை 26,74,063 ரூபாயை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கணக்கிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை அப்பல்லோ மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.