Sunday, May 04 12:45 pm

Breaking News

Trending News :

no image

ஸ்ரீமதி சடலத்துடன் புதைக்கப்பட்ட ‘அந்த’ பொருள்…! கண்ணீர்விட்ட மக்கள்


கள்ளக்குறிச்சி: மாணவி ஸ்ரீமதியின் உடலுடன் அவர் படித்த பாட புத்தகங்களும் வைக்கப்பட்டதை கண்டு ஊர்மக்கள் கண்ணீர்விட்டனர்.

கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 12ம் தேதி மர்ம மரணம் அடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அறிவிக்க, அதில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறினர். அவரது உடலை வாங்க மறுக்க… மாணவி மரணத்தை கண்டித்து எழுந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.

ஸ்ரீமதி படித்த பள்ளி சூறையாடப்பட்டது, பேருந்துகள், கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர்.

இதனிடையே 2 முறை போஸ்ட் மார்ட்டம் செய்த பின்னர் ஸ்ரீமதியின் உடலை கோர்ட் உத்தரவுப்படி பெற்றோர் பெற்றுக் கொண்டனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பெரியநசலூர் கொண்டு வரப்பட்டது.

காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே ஊர்மக்கள் முன்னிலையில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. உள்ளூர்மக்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்களை தவிர வேறு யாருக்கும் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

பின்னர் மாணவி ஸ்ரீமதியின் உடல் வீட்டில் இருந்து மயானம் நோக்கி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வாகனத்தின் முன்னேயும், பின்னேயும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்றனர்.

மயானத்தில் தந்தை கண்ணீர் மல்க இறுதி சடங்கை செய்தார். 2 நிமிட மவுன அஞ்சலிக்கு பின்னர் மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது உடலுடன் அவர் படித்த புத்தகங்களான தாவரவியல், விலங்கியல் புத்தகங்கள் வைக்கப்பட்டது. அந்த புத்தகங்களுடனே மாணவியின் சடலம் புதைக்கப்பட்டது.

Most Popular