இதோ 12ம் வகுப்பு ரிசல்ட்..! பள்ளிக்கல்வி வரலாற்றில் முதல் முறை நிகழ்ந்த மாற்றம்..!
சென்னை: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் முதல்முறையாக மாணவர்களின் மதிப்பெண்கள் தசம எண்களில் கணக்கிடப்பட்டு உள்ளது.
கொரோனாவின் கோர தாக்குதல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு எந்த அடிப்படையில் மார்க் கணக்கிடுவது என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டது.
இந் நிலையில் இன்று காலை 11 மணியளவில் 12ம் வகுப்பு ரிசல்ட்டை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அவர்கள் முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ள முடியும். பள்ளிகளில் மாணவர்கள் வழங்கி உள்ள செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இன்று வெளியான முடிவுகளில் தேர்வை அட்டெண்ட் பண்ணிய 8,16,473 பேர் பாஸாகி உள்ளனர். தேர்வு எழுதாத 1656 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்த முறை 600க்கு 600 மார்க் எடுத்தவர்கள் என்று யாரும் இல்லை.
மதிப்பெண் முறையில் திருப்தி அடையவில்லை எனில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வை மீண்டும் எழுதலாம் அல்லது வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். முதல்முறையாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மதிப்பெண்கள் முதல்முறையாக தசம எண்களில் கணக்கிடப்பட்டு உள்ளது.