Sunday, May 04 11:47 am

Breaking News

Trending News :

no image

நாகை, திருப்பூருக்கு வந்த நிலைமை…! மக்களே… இன்று முதல் ஞாபகம் வச்சுக்கோங்க


திருப்பூர்: கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளதால் திருப்பூரிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழகம் இப்போது கொரோனாவின் 2வது அலையின் பிடியில் இருக்கிறது. இந்த மாதம் அல்லது செப்டம்பர் மாதம் கொரோனா 3வது அலை வரும், தயாராக இருங்க என்று சுகாதார நிபுணர்கள் அலர்ட் கொடுத்துள்ளனர். ஆனாலும் அந்த 3வது அலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பது தான் தற்போதைய நிலைமை.

2வது அலை கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் நாள்தோறும் கொரோனா தொற்றுகள் பல மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது. மான்செஸ்டர் நகரமான கோவையில் கொரோனா பாதிப்புகள் உயர்ந்ததால் கடைகள் இயங்கும் நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சுகாதார நோய் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இப்போது கோவையை தொடர்ந்து பனியன் நகரமான திருப்பூரும் கொரோனாவில் பிடியில் மறுபடியும் சிக்கி இருக்கிறது. இங்கும் கொரோனா தொற்றுகள் உயர்ந்து கொண்டே செல்வதால் கட்டுப்பாடுகள் மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அவை என்ன கட்டுப்பாடுகள் என்று பார்ப்போம்:

அதாவது வார இறுதியில் வணிக வளாகங்கள் திறக்கக்கூடாது. கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சர்டிபிகேட் அவசியம் கொண்டு வர வேண்டும்.

பால், மருந்தகம் ஆகிய கடைகள் கட்டுப்பாடுகள் இன்றி இயங்கலாம். மற்ற கடைகள் காலை 6 முதல் மாலை 5 வரை மட்டும் தான் திறக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளுக்கு காலை 10 முதல் மாலை 5 மணி வரையே அனுமதி. ஓட்டல்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். இரவு 9 மணி வரை பார்சல் அனுமதி உண்டு. சனி, ஞாயிறுகளில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் திறக்கக் கூடாது.

திருப்பூர் மாவட்டத்துக்கு மட்டுமல்ல… நாகை மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வரும் 31ம் தேதி வரை வெள்ளி முதல் ஞாயிறு வரை மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை வரவும் தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Most Popular