#விஜயகாந்த் இணையத்தை கதற வைக்கும் வீடியோ
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் காலமாகிவிட்ட நிலையில் அவரின் பழைய வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்ணீர்விட வைக்கிறது.
திரையிலும், நிஜத்திலும் மனதில் பட்டதை பேசும் சுபாவம் கொண்டவர் விஜயகாந்த். மக்களுக்கு எதையும் செய்வேன் என்று தேமுதிக என்ற கட்சி ஆரம்பித்தார். பல கட்ட சோதனைகளை கடந்து அவரும், கட்சியும் வளர்ந்த நிலையில் உடல்நலக்குறைவால் விஜயகாந்த் தற்போது நம்மிடம் இல்லை.
அவரின் மரணம் அனைத்து தரப்பினருக்கும் பேரிழப்பாக இருக்கும் நிலையில், அரசியல் மேடைகளில் அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
2008ம் ஆண்டு உலக மகளிர் தின பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்போது விஜயகாந்த் பேசிய வீடியோவின் ஒரு பகுதி இப்போது டிரெண்டிங் ஆகி கண்ணீர் சிந்த வைக்கிறது.
அவரின் சுபாவம், நடவடிக்கை, தைரியம் ஆகியவற்றை வெளிக்காட்டும் அந்த வீடியோ இந்த செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.