புதுச்சேரி வெங்கடேசனுக்கு கட்டம் கட்டிய திமுக…! துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு இன்று காலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. அரசு பெரும்பான்மை இழந்ததால் தமது முதலமைச்சர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்தார்.
நேற்று தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் திடீரென்று பதவியை ராஜினாமா செய்தார்..இந் நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளரான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.வெங்கடேசன், கழகக் கட்டுபாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவித்து உள்ளார்.