Sunday, May 04 12:08 pm

Breaking News

Trending News :

no image

சோனியா, ராகுல் கைதா….? தகிக்கும் காங்கிரஸ் முகாம்


டெல்லி: சோனியா, ராகுல் வீடுகளை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளதால் கைது நடவடிக்கை என்ற தகவல் வெளியாகி காங்கிரஸ் தொண்டர்களை கொதிக்க வைத்துள்ளது.

காங்கிரசுக்கு தற்போது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது நேஷனல் ஹெரால்டு வழக்கு. இந்த வழக்கில் மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

குறிப்பாக அமலாக்கத்துறையானது சோனியா, ராகுல் ஆகியோரை அழைத்து பலமணி நேரம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையை கண்டித்து நாடெங்கிலும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்களில் குதித்தனர்.

நிலைமை இப்படி இருக்க, திடீரென டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஹெரால்டு ஹவுசில் இருக்கும் யங் இந்தியா வளாகத்தை பூட்டி அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.

அதே நேரத்தில் ஜன்பத் சாலையில் உள்ள சோனியா, ராகுல் ஆகியோரது வீடுகள் முன்பும் வீட்டை சுற்றி மற்றும் வீடு அமைந்துள்ள பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சாலைகளில் தடுப்புகள் பாதுகாப்பு அரண்களாக போடப்பட்டு உள்ளன.

யாரும் நுழைந்துவிடாதபடி கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் எந்நேரமும் சோனியா, ராகுல் கைது இருக்கலாம் என்று ஒரு தகவல் டெல்லி வட்டாரத்தில் கசிந்து தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. அதை திசைதிருப்பவே இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று கூறி உள்ளனர்.

Most Popular