ஈபிஎஸ் ஷாக் அறிவிப்பு..! குழம்பும் தொண்டர்கள்
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பால் தொண்டர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
சில காரணங்களால், 7.4.2023 வெள்ளிக் கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த கழக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி பின்னர் அது ரத்தானது. அதற்கு பதில் செயற்குழு என்று அறிவிக்கப்பட்டு தற்போது அதுவும் கேன்சல் செய்யப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வான பின்னர், அதிமுகவில் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட கூட்டங்கள் ரத்தாகி உள்ளதால் தொண்டர்கள் உச்சக்கட்ட குழப்பில் தவிக்கின்றனர்.