அதிமுக ‘அட்ராசக்க’ செட்டப்..! திமுகவின் ‘அதிரி புதிரி’ வீடியோ..!
சென்னை: வெள்ள சேதத்தை பார்க்க வரும் திமுகவினருக்கு எதிராக எப்படி பேசி, பிரச்னை செய்ய வேண்டும் என்று அதிமுக செய்த ரிகர்சலை திமுக நிர்வாகி வெளியிட்டு உள்ளார்.
மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளான தலைநகர் சென்னையில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே சொல்லலாம். நகர் பகுதிகளில் அனைத்தும் நார்மலாகி விட, புறநகர் பகுதிகளில் இன்னமும் அதிகாரிகள் முகாமிட்டு சுறுசுறு மீட்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆளும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியின் முக்கிய பிரமுகர்கள், எம்எல்ஏக்கள் செல்லும் போது ஆளுங்கட்சிக்கு எதிராக பேசிய சம்பவங்களை காண முடிந்தது. ஆனால் அனைத்தும் மக்களாகவே பேசியதாக எடுத்து கொள்ள கூடாது, செட் செய்யப்பட்ட அதிமுக டிராமாவும் இதில் அடங்கும் என்றும் திமுகவினர் கூறி வந்தனர்.
அது எப்படி? இப்படியா இருக்கும்? என்று சந்தேகம் கொண்டவர்களுக்கு சவுக்கால் அடித்தது போன்று ஒரு வீடியோவை திமுக வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவை திமுகவின் மாணவர் அணி மாநில துணை செயலாளர் தமிழ் கா. அமுதரசன் தமது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
https://twitter.com/amutharasan_dmk/status/1734092753934619049
அந்த வீடியோவில் திமுகவினர் வரும்போது, அவர்களிடம் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும்? என்ன டயலாக் பேசி டென்ஷன்படுத்த வேண்டும்? என்று ரிகர்சல் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆளும் கட்சி பிரமுகர்களிடம் ஆவேசமாகவும் அதே நேரத்தில், அரசை குறை சொல்லியும் பேச வேண்டும் என்று அவர்கள் கூறும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் திமுக மீது பரப்பிய குற்றச்சாட்டுகள் என்பதை உணர்ந்து கொள்ளலாம் என்றும் அதை வெளியிட்டுள்ள தமிழ் கா. அமுதரசன் கூறி உள்ளார்.
நேயர்களுக்காக இந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.