Sunday, May 04 12:45 pm

Breaking News

Trending News :

no image

அண்ணாமலையை மிரட்டும் பாஜக நிர்வாகி…! எலெக்ஷன் அலப்பறை


நாங்க சொல்ற வேட்பாளரை நிறுத்துங்க, வெளியூர்காரரை வேட்பாளரா போட்டீங்க, டெபாசிட் காலி என்று அண்ணாமலையையும், பாஜகவையும் மிரட்டும் வகையில் கூறியிருக்கிறார் திருச்சி சூர்யா சிவா.

திருச்சி என்றால் உட்கட்சி பூசல்களுக்கு அதிகம் பேர் போன நகரம். அது பாஜகவுக்கும் விதிவிலக்கல்ல. தற்போது லோக்சபா 2024 தேர்தல் பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பரபரப்பில் பாஜக தமிழக தலைமையும், டெல்லி தலைமையும் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், திருச்சி தொகுதிக்கு வெளியூர்காரை வேட்பாளராக போட்டால் வெற்றியை நினைச்சு பாக்காதீங்க என்று பாஜக பிரமுகர் திருச்சி சூர்யா மிரட்டி இருக்கிறார்.

திருச்சிக்கு பாஜகவில் கடும் போட்டியா என்று யோசித்தால் அப்படி இல்லை. இந்த தொகுதிக்கு பாஜகவின் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியிட இருக்கிறார். அவரை வேட்பாளராக களம் இறக்க கட்சி தலைமை முடிவு செய்து டிக் அடித்து பட்டியலை தயார் செய்துள்ளதாம்.

இதை அறிந்த சூர்யா சிவா, இப்படி ஓபன் ஸ்டேட்மெண்ட்டை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளி மாவட்டத்தை சேர்ந்த இராம ஸ்ரீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும்.

வெற்றியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை களம் இறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

திருச்சி சூர்யா சிவாவின் இந்த பதிவை கண்ட பலரும் கொதித்து எழுந்து விமர்சித்துள்ளனர். சிலர் உனக்கு சீட்டு வேணும்னா நேரிடையா கேளு என்று வம்பு கமெண்ட் அடித்துள்ளனர். என்னதான் பிடிக்கவில்லை என்றாலும் இப்படியா கட்சி தலைமையை நேரிடையாக மிரட்டுவது என்றும் சிலர் நடுநிலையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Popular