எல். முருகனுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்கா…! பிரதமர் மோடியின் சர்ப்ரைஸ்
டெல்லி: எல். முருகனுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது. மீன்வளம், கால்நடைகள் மற்றும் பால்வளத்துக்கான இணை அமைச்சராகவும் அவர் இருப்பார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் 43 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்த சூழ்நிலையில் அமைச்சர் பதவியை ஏற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
தர்மேந்திர பிரதான் - கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
பியூஷ் கோயல் - ஜவுளி மற்றும் நுகர்வோர் நலத்துறை
ஸ்மிருத்திரணி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை மற்றும் ஸ்வச் பாரத் திட்டம்
ஹர்தீப் சிங் பூரி - சுகாதாரம் மற்றும் உரங்கள், கெமிக்கல்ஸ், பெட்ரோலியம், ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி
அஸ்வானி வைஷ்ணா - ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பம்
எல். முருகன் - தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடைகள் மற்றும் பால்வளத்துறை
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் கூட்டுறவுத் துறையை கவனிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.