ICC World Cup 2023 இந்திய அணிக்காக பிரதமரின் சூப்பர் சர்ப்ரைஸ்…!
டெல்லி: உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியை பிரதமர் மோடி நேரில் சென்று கண்டுகளிக்க உள்ளதாக தெரிகிறது.
ஏகோபித்த எதிர்பார்ப்பு மற்றும் ஆதரவுடன் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் 2023 இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பைனலுக்கு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நுழைந்துள்ளன. இந்த போட்டி வரும் ஞாயிறன்று அகமதாபாதில் நடக்கிறது.
இந்திய அணி பைனலில் உள்ளதால், போட்டியை காண இப்போதோ உலகம் எங்கும் உள்ள ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். ஆஸ்திரேலியாவை அடித்து துவைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்த பிரதமர் மோடி நேரில் சென்று இறுதி போட்டியை கண்டு களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, உற்சாக அளிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி செல்லக்கூடும் என்ற இந்த தகவலால் வீரர்கள் மட்டுமல்லாது, ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக, இந்தியா ஆஸ்திரேலியா பார்ட்ர் கவாஸ்கர் டிராபி 4வது டெஸ்ட் போட்டியின் போது பிரதமர் மோடி அகமதாபாத் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.