தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! தமிழக அரசு உத்தரவு
சென்னை :தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்டோபர் 31 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்று கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, அக்டோபர் 31 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கை நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு தினமும் 100 உள் நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி தரப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை நீட்டிக்கப்படுகிறது. அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும். புறநகர், மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கும் தடையும் தொடருகிறது. மதம், அரசியல் கட்டடம், பொழுது போக்கு கட்டடங்களுக்கும் தடை நீட்டிக்கப்படுகிறது.
தேனீர் கடைகள், உணவகங்கள், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி உண்டு. கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து தடை நீடிக்கப்படும்.
ஊரக மற்றும் நகர்பகுதிகளில்உள்ள வாரச்சந்தைகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதி தரப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.