பவர் ஸ்டார் தந்த முத்தம்…! வனிதா விஜயகுமாருடன் ஒரு நெருக்கமான போட்டோ
சென்னை: நடிகை வனிதா விஜயகுமாருக்கு பவர் ஸ்டார் முத்தம் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் தான் இப்போது டிரெண்டிங். ஏதாவது ஒரு வம்பில் சிக்கி கொண்டு சர்ச்சையின் மையமாகிவிட்டார். எதையாவது பேசி மீண்டும், மீண்டும் செய்திகளில் அடிப்பட்டு வருகிறார்.
இப்போது லேட்டஸ்ட் பவர் ஸ்டார் வனிதாவுக்கு முத்தம் கொடுத்ததுதான். அப்படித்தான் ஒரு போட்டோ இணையத்தில் உலா வருகிறது. வனிதா விஜயகுமாருடன் படு நெருக்கமாக இருக்கும் அந்த போட்டோவில் பவர் ஸ்டார் வனிதா கையில் முத்தமிடுகிறார்.
பைக்கில் நெருக்கமாக உட்கார்ந்து, வனிதாவுக்கு பவர்ஸ்டார் முத்தமிடுகிறார். இந்த போட்டோவை வனிதா தமது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
வழக்கமாக ஏதாவது போட்டோ போட்டால் உடனே அதன் கீழே ஏதாவது எழுதுவார். இந்த போட்டோவில் எதுவும் எழுதவில்லை. ஆனாலும் போட்டோ இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.