Sunday, May 04 12:55 pm

Breaking News

Trending News :

no image

சானிடைசர் யூஸ் பண்ணினா கண்பார்வை பறிபோகும்..! ஷாக் தந்த ஆராய்ச்சி முடிவுகள்


டெல்லி: சானிடைசர் பயன்படுத்தினால் அதில் உள்ள நச்சுப் பொருட்களினால் கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன.

சிஜிஎஸ்ஐ என்ற மத்திய நுகர்வோர் வழிகாட்டுதல் அமைப்பு இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தான் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

சில சானிடைசர்களில் அதிக நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

இந்த அறிக்கை ஆகஸ்ட் 31 அன்று வெளியானாலும் இப்போது தான் அதன் விவரங்கள் வெளிவர தொடங்கி உள்ளன. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:

மொத்தம் 122 சானிடைசர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 5 சானிடைசர்களில் நச்சுத்தன்மை கொண்ட மெத்தனால் கலந்திருந்தது. 45 சானிடைசர்களில் பாட்டிலில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்களுடன் உள்ளே இருந்த வேதிப்பொருட்கள் வெவ்வேறாக இருந்துள்ளன.

4% நச்சுத்தன்மை கொண்ட மெத்தனாலும் கலக்கப்பட்டு இருந்திருக்கிறது. இந்த சானிடைசர்கள் அனைத்தும் மும்பை, நவி மும்பை, தானே மற்றும் அதன் சுற்றுப்புற சந்தையில் கிடைத்தவையாகும். இறுதியாக இவற்றை பயன்படுத்தினால், ஆராய்ச்சி முடிவுகளின் படி,  சரிசெய்ய முடியாத அளவுக்கு பார்வை நரம்பு பாதிக்கும்,  கண் பார்வை பறிபோகும் என்றும் தெரிய வந்துள்ளதாக ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Most Popular