யாருக்கெல்லாம் ரூ.1000….? அறிவித்த ஸ்டாலின்
சென்னை: மகளிர் உரிமைத் தொகை யாருக்கு எல்லாம் கிடைக்கும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சட்டசபையில் அவர் பேசி உள்ளார். அப்போது இத்திட்டத்தை பலர் பாராட்டுகின்றனர், இது குறித்து நீண்ட விளக்கம் தருவதாக கூறினார். இந்த நூற்றாண்டின் மகத்தான திட்டம் என்று கூறிய அவர், யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்கும் என்றும் பட்டியலிட்டு உள்ளார்.
- நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர்
- அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர்
- கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள்
- வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர்
- ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள்
என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.