Sunday, May 04 12:37 pm

Breaking News

Trending News :

no image

பெங்களூரு To சென்னை…! சசிகலாவின் விடிய, விடிய பயணம்….!


சென்னை: பெங்களூருவில் இருந்து வழிநெடுக தொண்டர்கள் வரவேற்புடன் காரில் மிதந்து வந்த சசிகலா இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் என்று உரிமை கொண்டாடி அப்படியே நடந்து வரும் சசிகலா பெங்களூருவில் இருந்து நேற்று காலை 7.30 மணி அளவில் தமது சென்னை பயணத்தை தொடங்கினார். வழிநெடுக தொண்டர்களின் வரவேற்பு, வாழ்த்து மழையில் நனைந்த அவரது பெங்களூரு to சென்னை பயணம் இன்று காலை 6.5 மணிக்கு தி நகரில் நிறைவு பெற்றது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னை எல்லையான கிண்டி வந்த அவர், பின்னர் ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சில நிமிடங்கள் அங்கு உட்கார்ந்து டிடிவியுடன் சகஜமாக உரையாடிய அவர், தி நகரில் உள்ள தமது இல்லத்துக்கு புறப்பட்டார்.

அவர் தி நகர் வர  கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆனது. அப்போது மணி 6.25 மணி. மேளதாளம், நாதஸ்வரங்கள் முழங்க, பெண்கள் ஏராளமானோர் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கிட்டத்தட்ட 24 மணி நேரம் பயணம் மேற்கொண்ட அவர் இன்று முழு ஓய்வெடுப்பார் என்றும், நாளை அல்லது அடுத்து வரக்கூடிய நாட்களில் பிரம்மாண்ட செய்தியாளர் சந்திப்பை நடத்தி அரசியல் அதிரடியை ஆரம்பித்து வைப்பார் என்று கூறுகின்றனர் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.

Most Popular