கொரோனா 3வது அலை வருமா? வராதா…? வெளியான ‘ஷாக்’ தகவல்…!
டெல்லி: கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதாக நிதி ஆயோக் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இந்த கொரோனாவின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. நாள்தோறும் பதிவாகி வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையே அதை உணர்த்துகிறது.
தடுப்பூசிகள் இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஓயவில்லை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறையவில்லை. அடுத்து எப்போது 3வது அலை வரும் என்று பயம் மக்களிடம் இருந்து வருகிறது.
அதற்கான பதிலை நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. சில நாடுகளில் 3வது அலைக்கான அறிகுறி தொடங்கிவிட்டது, அதனால் தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது என்று நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: கொரோனா 3வது அலையில் இருந்து மக்கள் தப்பிக்க வேண்டும். அதற்கு அரசு அறிவித்துள்ள விதிகளை கண்டிப்பாக மக்கள் பின்பற்ற வேண்டும்.
அண்மைக்காலமாக மாஸ்க் அணியாமல் மக்கள் நடமாடுவது தெரிய வந்துள்ளது. கண்டிப்பாக அனைவரும் மாஸ்க் போட வேண்டும். தனிமனித இடைவெளி அவசியம். கட்டாயம் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் போதும், 3வது அலையில் இருந்து பொதுமக்கள் தப்பித்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.