இவ்வளவுதானா..? நடிகர் வடிவேலு சொத்து மதிப்பு…?
சென்னை: நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு இவ்வளவு என்று ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் இப்போது வடிவேலு நடிப்பது இல்லை. அவர் கடைசியாக நடித்த படம் மெர்சல். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் அவர் சேர்ந்து நடித்து இருந்தார்.
தற்போது படத்தில் நடிக்காவிட்டாலும் மீம்ஸ் கதாநாயகன் என்றால் அது வடிவேலு தான். எந்த விஷயம் இருந்தாலும் அதன் மீம்சில் வடிவேலு இருப்பார்… வடிவேலு மட்டும் தான் இருப்பார். எல்லாவிதமாக கமெண்ட்டுகளுக்கும், பொருத்தமாக தான் அவரது வசனங்களும், ஸ்டைலும் இருக்கும்.
இந் நிலையில் நடிகர் வடிவேலு சொத்து மதிப்பு என்ன என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் ஓடி கொண்டு இருக்கிறது. அதாவது 130 கோடி ரூபாயாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தமது திரையுலக பயணத்தின் விளைவாக வடிவேலு சொத்து மதிப்பு 130 கோடி என்று தகவல்கள் கோலிவுட்டில் கூறினாலும். இது எந்த அளவுக்கு உண்மை என்று அவரது தரப்பில் விளக்கினால் மட்டுமே நிஜமாகும்.