Sunday, May 04 11:53 am

Breaking News

Trending News :

no image

‘கேப்டன்’ நல்லாயிருக்காரா…? தொண்டர்களுக்கு ‘அண்ணியாரின்’ வீடியோ


சென்னை: கேப்டன் விஜயகாந்துக்கு என்னாச்சு? அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை, தொடர்ந்து 14 நாட்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகத்தினர் கவலை அடைந்தனர். அவர் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்த வண்ணம் உள்ளனர்.

இந் நிலையில் விஜயகாந்தின் உடல்நிலையில் என்ன பிரச்னை? தற்போது எப்படி இருக்கிறார்? என்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறி உள்ளதாவது; மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். மேலும் விரைவில் முழு உடல்நலத்துடன் விஜயகாந்த் வீடு திரும்பி அனைவரையும் சந்திப்பார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

பிரேமலதாவின் வீடியோ இந்த செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.

Most Popular