Sunday, May 04 11:43 am

Breaking News

Trending News :

no image

கோவிஷீல்டு 2வது டோஸ் எப்போது போட்டுக் கொள்வது..? மத்திய அரசு புதிய அறிவிப்பு


டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் கால அளவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ், 2வது டோசுக்கான கால இடைவெளி என்ன என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. முதல் டோசுக்கும், 2வது டோசுக்குமான இடைவெளி இப்போது அதிகரிக்கப்பட்டு உள்ளது.  அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

அதாவது, முதல் டோஸ் முடிந்து 2வது டோசுக்கான கால இடைவெளியை 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என்று நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது. 2வது டோசை 12 முதல் 16 வாரங்களுக்குள் செலுத்தி கொண்டார் அதன் பலன் கூடுதலாக கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி முடிவுகள் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அளவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் அரசியல் ஆக்கப்படுவது எதிர்பாராத ஒன்று என தெரிவித்துள்ளார்.

Most Popular