திடீர் டுவிஸ்ட்…! ஓபிஎஸ் வீட்டுக்கு நேரில் போன இபிஎஸ்..!
சென்னை: அதிமுக எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள எடப்பாடி பழனிசாமி, எதிர்பாராத விதமாக ஓபிஎஸ் வீட்டுக்கு சென்றார்.
அதிமுக முகாமில் கடந்த 3 நாட்களாக பெரும் குழப்பமான நிலை நிலவியது. நாளை சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் கட்டாயம் இருந்தது.
பெரும் எதிர்பார்ப்பு, காரசாரமான விவாதம், கருத்து மோதல்களுக்கு பின்னர் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுக்காமல் ஓபிஎஸ் கடும் பிடிவாதம் காட்டி வந்தார்.
கூட்டத்தில் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நிற்க, கடைசியில் அவரே எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை அதிமுக நிர்வாகிகள் சட்டசபை செயலாளரிடம் நேரில் கொண்டு சென்று கொடுத்தனர். இந் நிலைய்ல எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் வீட்டுக்கு சென்றார். கடந்த 3 நாட்களாக நிலவிய காரசாரமான விவாதம், கருத்து மோதல்கள் காரணமாக ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதால் அவரை சமாதானம் செய்யவே இபிஎஸ் சென்றுள்ளதாக அதிமுகவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இபிஎஸ்சுடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட சிலரும் சென்றனர்.