ஹெச். ராஜாவுக்கு பதிலடியாக சிவகார்த்திகேயன் செய்த ‘தரமான’ சம்பவம்..!
சென்னை: தமது அப்பா பெயரில் நடத்தும் அறக்கட்டளை மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்கத்துக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களை சில அரசியல்வாதிகள் அவ்வப்போது உரசி பார்ப்பது வழக்கமான ஒன்று. சில காலம் இதுபோன்ற விவகாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு பின்னர் காணாமல் போய்விடும்.
அப்படியொரு சம்பவத்தை அண்மையில் தொடக்கி வைத்திருக்கிறார் பாஜக மூத்த நிர்வாகி ஹெச் ராஜா. நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா பற்றி பேசி இணையதளத்தில் செமத்தியாக வாங்கி கட்டிக் கொண்டு இருக்கிறார்.
அவருக்கு இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் தரமான சம்பவத்தை செய்திருப்பதாக அவரது ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். விஷயம் இதுதான்….
தமது தந்தை ஜி. தாஸ் பெயரில் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக 1 லட்சம் ரூபாய் நடிகர் சங்கத்துக்கு நிதி உதவி அளித்துள்ளார். தமது அப்பா பெயரில் நிதி அளித்து ஹெச் ராஜாவுக்கு பதிலடி தந்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.
சிவகார்த்திகேயன் ஏதாவது ஒரு வழியில் ஹெச் ராஜாவுக்கு பதிலடி தருவார் என்று காத்திருந்தோம், நாங்கள் எதிர்பார்த்தபடியே காசோலை மூலமாக அட்டகாசமாக பதில் தந்துவிட்டார், இது ஒன்றே போதும் என்று ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர்.