இவர்தான் தமிழகத்தின் புதிய ஆளுநர்…? திமுகவுக்கு மத்திய அரசு ‘செக்’
சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக குஜராத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழகத்தில் அரியணையில் அமர்ந்ததில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான தமது டிரேட் மார்க் எதிர்ப்பு அரசியலில் திமுக வேகமாக இயங்கி வருகிறது. திமுகவின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி வகையில் உள்ளன.
குறிப்பாக ஒன்றியம் என்ற அரசு, மத்திய அரசை உச்சபட்ச கோபத்தில் கொண்டு போய் உட்கார வைத்திருக்கிறது. அதே போல், நீட் தேர்வு எதிர்ப்பு, எழுவர் விடுதலையில் ஆர்வம், புதிய கல்வி கொள்கை என மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசின் பட்டியல் நீள்கிறது.
திமுக அரசின் இந்த எதிர்ப்பு போக்கு மத்திய அரசு செமையாக கோபத்தில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. திமுகவின் எதிர்ப்பு அரசியலுக்கு கடிவாளம் போட முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, தமிழக ஆளுநரை மாற்ற இறுதியாக ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதாவது, குஜராத்தை சேர்ந்த முக்கிய நபரை தமிழக ஆளுநராக நியமிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட உள்ளார் என்று பேச்சுகள் வெகுவாக எழுந்தன.
தற்போது குஜராத்தை சேர்ந்த ஒருவரை ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முடிவெடுத்தாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு செக் வைக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.