நடிகர் விஜய்யை உண்டு, இல்லை என்று பண்ணும் 3 பேர்…!
சென்னை: நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் 3 வில்லன்கள் அவரை புரட்டி போட காத்திருக்கிறார்களாம்.
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கம் என்பதால் நிச்சயம் ஹிட் தான் என்று விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஜார்ஜியா மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. 3ம் கட்ட ஷூட்டிங் இப்போது சென்னையில் நடந்து வருகிறது. படத்தின் முக்கிய தகவல் ஒன்று லீக்காகி இருக்கிறது. படத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக 3 வில்லன்கள்.
இந்த வில்லன்கள் கதைப்படி விஜய்யை புரட்டி எடுக்க உள்ளனராம். அந்த அனைத்து பிளான்களையும் நொறுக்கி தள்ளுவாராம். 3 வில்லன்களில் ஒருவர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.
படத்தை தயாரிப்பது சன் பிக்சர்ஸ் என்பதால் ஒவ்வொரு காட்சியும் படு கலக்கலாக செதுக்கப்பட்டு வருகிறதாம். மற்ற படங்களை விட வித்தியாசமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் படு எதிர்பார்ப்பில் உள்ளனர்.