மறுபடியும் முதலில் இருந்தா..? ‘அதை’ கையில் எடுக்கணும்.. நேரம் வந்தாச்சு
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது, முகக்கவசம் அணியுங்கள் என்று சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
இன்னமும் எத்தனை நாட்கள் கொரோனா, கொரோனா என்று பரிதவிக்க போகிறோம் என்று தெரியவில்லை. கேரளாவில் கடந்த சில நாட்களாக அதிகளவில் பதிவான கொரோனா தொற்று இப்போது தமிழகத்தில் தமது ஆட்டத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறது.
தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் தூத்துக்குடியில் சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: நமது மாநிலத்தில் கொரோனா தொற்றுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 6 மாதங்களாக ஒற்றை எண்ணிக்கையில் இருந்த இதன் பாதிப்பு தற்போது 23 ஆக உயர்ந்துள்ளது.
யாருக்கு எல்லாம் காய்ச்சல், சளி தொந்தரவு உள்ளதோ அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வயதானாவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்கள் அல்லது மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.