என்ன… ஆரம்பிச்சாச்சா…? அமைச்சர் பற்றி பிரபல நடிகை ‘அட்ராசிட்டி’ டுவீட்
சென்னை: எங்க ஏரியாவில் 3 மணி நேரம் கரண்டே இல்லை… உங்க ஏரியாவில் எப்படி? என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை டுவிடடர் போட்டு வம்பிழுத்து இருக்கிறார் பிரபல நடிகை கஸ்தூரி.
மற்ற நடிகைகள் மாதிரி நடிகை கஸ்தூரி கிடையாது. எப்பவுமே சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர். எது சரி என்று தோன்றுகிறதோ அதன் விளைவுகள் எப்படி இருந்தாலும் கவலைப்படாமல் வெளிப்படுத்தும் நபர்.
இவரது டுவிட்டர் பதிவுகள் எப்போதுமே பிரபலம். எந்த விஷயமாக இருந்தாலும் பட்டவர்த்தனமாக பதிவு போட்டு எதிராளிகளை கலங்கடிப்பார். அவரின் பதிவு கடைசியில் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்துவது உண்டு.
மின்வெட்டு, அணில் குறித்து கருத்து தெரிவித்து இருந்த அவர், அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் டேக் செய்திருந்தார். செல்லூர் ராஜூவின் விஞ்ஞான அறிவுக்கு விசிறியாக இருந்தவர் எல்லாம் இப்போது செந்தில் பாலாஜிக்கு விசிறியாக மாறிவிட்டனர் என்று கிண்டல் செய்திருந்தார்.
நடிகை கஸ்தூரியின் அந்த பதிவு அப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது மறுபடியும் ஒரு டுவிட் போட்டு அதகளம் பண்ணியிருக்கிறார். அவர் தமது டுவிட்டில் கூறி இருப்பதாவது:
மறுபடியும் கரண்ட் கட் ஆரம்பிச்சாச்சு… கடந்த வாரம் 3 மணி நேரம் தொடர்ந்து கரண்டே இல்லை. சென்னையை சுற்றி வசிக்கும் பணக்காரர்கள் இதை யோசிக்காதவர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து கரண்ட கட் நடக்கிறது. உங்க ஏரியாவில் நிலைமை எப்படி? என்று கேட்டு உள்ளார். இந்த டுவிட்டரை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அவர் டேக்கும் செய்திருக்கிறார்.