Sunday, May 04 12:25 pm

Breaking News

Trending News :

no image

சூப்பர் ஸ்டார் காலில் ‘பொசுக்கென்று’ விழுந்த சூப்பர் ஆக்டர்…!


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலில் விழுந்து நடிகர் மாதவன் வாழ்த்து பெறும் வீடியோ வைரலாகி உள்ளது.

சாக்லேட் பாய், இளைஞிகளின் கனவு நாயகனாக வலம் வந்தவர் மாதவன். தற்போது நடிப்பை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ராக்கெட்ரி என்ற படத்தை எழுதி இயக்கி இருக்கிறார்.

முதன்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள அவரை சினிமா பிரபலங்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். இந் நிலையில் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் மாதவன் நேரில் சென்று சந்தித்துள்ளார். அவரது காலில் விழுந்து மாதவர் ஆசி பெற்று இருக்கிறார்.

ராக்கெட்ரி படத்தை கண்ட ரஜினிகாந்த், மாதவனை மனதார பாராட்டி வாழ்த்தி உள்ளார். இந்த சந்திப்பில் விஞ்ஞானி நம்பி நாராயணனும் உடன் இருந்தார். இருவருக்கும் ரஜினிகாந்த் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். சந்திப்பு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Most Popular