தவணை நம்பர் 17…! மாநிலங்களுக்கு ரூ.5000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு ரிலீஸ்...!
டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையின் தவணையாக ரூ.5,000 கோடியை மத்திய அரசு விடுவித்து உள்ளது
இழப்பீட்டு தொகையின் 17வது தவணையாக இந்த 5,000 கோடியை 23 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் விடுவித்தது. இந்த 5,000 கோடியில் ரூ.4,730.41 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூ.269.59 கோடியானது யூனியன் பிரதேசங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி அமலானது முதல் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் ரூ.1.10 லட்சம் கோடி வரை சிறப்பு சாளரத்தின் கீழ் கடனாகப் பெற்று, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்து வருகிறது.
இதுவரை ரூ.1 லட்சம் கோடியை கணக்கிட்டால் 91 சதவீதம் தொகை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு விடுவித்து உள்ளது. அவற்றில் ரூ.91,460.34 கோடி மாநிலங்களுக்கும், ரூ.8,539.66 கோடி 3 யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.