Sunday, May 04 12:14 pm

Breaking News

Trending News :

no image

சொந்த ஊரில்… ‘பக்கா’ சைலண்ட் மோடில் எடப்பாடி…! குழம்பும் அதிமுகவினர்…!


சென்னை: தேர்தல் முடிவுகள் முழுதாக வெளியாகி 24 மணி நேரம் கடந்தும் எடப்பாடி பழனிசாமி என்ன மனோநிலையில் உள்ளார் என்பது தெரியாமல் கட்சியினர் குழம்பி போயுள்ளனர்.

நேற்றைய தினம் பெரும் எதிர்பார்ப்பில் அதிமுக முகாமானது இருக்க… திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னணியில் இருப்பது கண்டு தொண்டர்கள் சோகம் ஆகிவிட்டனர். தேர்தலில் அமைச்சர்களில் பலரும் தோற்றுபோய்விட்டனர்.

ஒட்டு மொத்தமாக அதிமுக 66 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியினருடன் சேர்த்து 75 தொகுதிகளில் வென்று குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டி பிடித்து உள்ளது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்ட நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இணைந்து கூட்டாக ஒரு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதிமுகவுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் பொன்னான வாக்குகளை அளித்த மக்ககளுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், மக்கள் பணி ஆற்றுவதில் கழக உடன்பிறப்புகள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் இருவரும் குறிப்பிட்டு உள்ளனர்.

அறிக்கை ஒரு பக்கம் வெளியானாலும், தேர்தல் முடிவுக்கு பின்னர் யாரையும் சந்திக்காமல் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சி வழியாக பார்த்த அவர் தாம்  வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கவும் வரவில்லை. மாறாக அவரது பிரதிநிதியே வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று சான்றிதைழை பெற்று சென்றுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் நிலவரம் பற்றி தெளிவான முடிவுகள் கிடைத்த பின்னரும் யாரையும் சந்திக்காமல் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருக்கிறாராம். யாரையும் சந்திக்காமல் உள்ளதால் கோபத்தில் அவர் உள்ளார் என்றும் ஓய்வில் இருக்கிறார் என்றும் ஆளாளுக்கு அதிமுகவினர் பேசி வருகின்றனர்.

Most Popular