Sunday, May 04 11:59 am

Breaking News

Trending News :

no image

ராம்விலாஸ் பாஸ்வான் திடீர் மறைவு…! அபயம் அமைப்பு ஆழ்ந்த இரங்கல்…!


சென்னை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு அபயம் அமைப்பின் நிறுவனர் ஆதிநந்தன் லெமூரியர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனத் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். 74 வயதான அவர் மறைந்துவிட்டார் என்பதை அவரது மகன் சிராக் பாஸ்வான் தமது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், தலித் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந் நிலையில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு அபயம் என அழைக்கப்படும் பாபாசாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறை (ABAYM) இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் நிறுவனர் ஆதிநந்தன் லெமூரியர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்திய தேசத்தின் இன்றைய தலித் சமுதாயத்தின் அடையாளமாகவும், ஆளுமையாகவும் விளங்கி கொண்டிருந்தவரான மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக கூறி உள்ளார்.

ராம்விலாஸ் பாஸ்வான் புத்தரடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், அபயம் என வழங்கும் பாசறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Most Popular