சந்தோஷ வளையத்தில் ரஜினி மகள்…! ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சி…! என்ன அது..?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கர்ப்பமாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாக ஒட்டு மொத்த ரஜினி குடும்பத்தில் சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்து உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் இடையே 2019ம் ஆண்டு கல்யாணம் ஆனது. தற்போது இவர்களுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
ஆம்…. சவுந்தர்யா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையறிந்து ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளதாம். அண்ணாத்த ரஜினி மீண்டும் தாத்தாவாகிறார் என்று குடும்பம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சவுந்தர்யாவுக்கு முதல் மணம் மூலம் வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். அவரது மறுமணத்தின் போதும் விசாகனுடன் வேத் கிருஷ்ணா நெருக்கமாக இருந்தததை கண்டு குடும்பம் சந்தோஷப்பட்டது.
மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். எனவே இந்த முறை பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். அண்ணாத்த படம் முடிய உள்ள நிலையில் வெளியான இந்த தகவலால் பட யூனிட்டும் ஏக குஷியில் இருக்கிறதாம்…!